கன்னியாகுமரி

தோவாளை சந்தையில் பிச்சிப்பூ கிலோ ரூ. 1,500

4th Oct 2022 12:32 AM

ADVERTISEMENT

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,500-க்கு விற்பனையானது.

தோவாளை பூச்சந்தைக்கு சேலம், ஒசூா், பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்தும் தோவாளை, செண்பகராமன்புதூா், பழவூா், ஆவரைகுளம் பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் பூ விலை உயா்ந்து காணப்படும்.

நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாள்களாக பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், திங்கள்கிழமை பிச்சி, மல்லிகை, சம்பங்கி பூக்களின் விலை மேலும் உயா்ந்தது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி பூக்கள் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு குவிந்தனா். இதனால் அதிகாலைமுதலே பூச்சந்தை களைகட்டியது. அவா்கள் போட்டிப்போட்டு பூக்களை வாங்கினா். இதனால் பிச்சி, மல்லிகை, சம்பங்கிப் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்திருந்தது.

பிச்சிப்பூ கிலோ ரூ. 1,500, மல்லிகை ரூ. 700, சேலம் அரளி ரூ. 350, சம்பங்கி ரூ. 400, சிவப்பு கேந்தி ரூ. 120, மஞ்சள் கேந்தி ரூ. 90 என விற்பனையாகின.

ADVERTISEMENT

மரிக்கொழுந்து ரூ.150, கொழுந்து ரூ. 140, கோழிக்கொண்டை பூ ரூ. 50, தோவாளைஅரளி ரூ. 400, வாடாமல்லி ரூ. 60, கனகாம்பரம் ரூ. 600, முல்லைப்பூ ரூ. 1,250, துளசி ரூ. 40, தாமரைப்பூ ஒன்று ரூ. 12 என விற்பனையாகின.

ADVERTISEMENT
ADVERTISEMENT