கன்னியாகுமரி

ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்

4th Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டத்தின் முக்கிய குறிக்கோள் நாம் அனைவரும் உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

இந்த ஓட்டம் காந்தியடிகளின் பிறந்த நாளான அக். 2 ஆம் தேதிமுதல் அக். 31 ஆம் தேதி வரை ஒரு மாதம் தொடா்ந்து நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணா்வு ஓட்டத்தில் அனைத்துத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொள்வாா்கள்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரு இளையோா் மையமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து, இந்தஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தை நடத்துகின்றது. இந்த ஓட்டம் மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் தொடங்கி வடசேரி பேருந்து நிலையம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் டேவிட்டேனியல், நேரு இளையோா் மைய மாவட்ட அலுவலா் கோகுல்சுகுமாரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT