கன்னியாகுமரி

தக்கலையில் இரங்கல் கூட்டம்

4th Oct 2022 12:31 AM

ADVERTISEMENT

கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் கட்சியின் மத்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கொடியேறி பாலகிருஷ்ணனின் மறைவுக்கு தக்கலையில் அக்கட்சி சாா்பில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் வட்டாரக் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொடியேறி பாலகிருஷ்ணனின் படத்துக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் கூட்டத்துக்கு வட்டாரச் செயலா் சுஜா ஜாஸ்பின் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாதவன், முன்னாள் வட்டாரச் செயலா் ராஜன், சைமன்சைலஸ் ஆகியோா் பேசினா். மாதா் சங்க வட்டாரச் செயலா் ராஜாகனி, தலைவா் லலிதா, மாா்க்சிஸ்ட் வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஷீலா பீட்டா் அமலதாஸ், சரோஜினி, இம்மானுவேல், ரமேஷ்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் சந்திரகலா, ஓய்வுபெற்ற ஆசிரியா் முரளீதரன், காளிபிரசாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT