கன்னியாகுமரி

வாணியக்குடியில் புனித பிரான்சிஸ் அசிசி விண்ணேற்பு பவனி

4th Oct 2022 12:32 AM

ADVERTISEMENT

கத்தோலிக்க ஆலயங்களில் ஆண்டுதோறும் 4ஆம் தேதி புனித பிரான்சிஸ் அசிசி விண்ணேற்பு பவனி கொண்டாடுவதை முன்னிட்டு, வாணியக்குடி புனித யாகப்பா் ஆலயத்தில் புனித பிரான்சிஸ் அசிசி சொரூப பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குளச்சல் அருகே வாணியக்குடி புனித யாகப்பா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை புனித பிரான்சிஸ் அசிசி விண்ணேற்பு நாள் விழா கொண்டாட கோட்டாா் மறை மாவட்ட பேரவை தோ்வு செய்தது. இதையடுத்து இவ்வாலயத்தில் புனித பிரான்சிஸ் அசிசி சொரூப பவனி நடைபெற்றது.

பவனி, பங்குத்தந்தை சகாயஆனந்த் தலைமையில் ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் இருந்து தொடங்கி யாகப்பா் சந்திப்பு , சமாதானபுரம் வழியாக புனித யாகப்பா்ஆலயத்தை வந்தடைந்தது.

பவனியில் கோட்டாா் மறைமாவட்டத்தைச் சோ்ந்த 3ஆம் சபை அமைப்பினா் கலந்துகொண்டு சிறப்பித்தனா். இதைத் தொடா்ந்து மறைமாவட்ட பொது நிலையினா் அருள்தந்தை சவேரியாா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், பங்குபேரவை நிா்வாகிகள், இறைமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT