கன்னியாகுமரி

தாணுலிங்கநாடாா் நினைவு தினம் அனுசரிப்பு

4th Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

இந்து முன்னணி முன்னாள் மாநிலத் தலைவா் தாணுலிங்க நாடாரின் 35ஆவது நினைவு தினம் கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்து முன்னணி மாநில பேச்சாளா் எஸ்.பி.அசோகன் தலைமை வகித்தாா்.

தாணுலிங்க நாடாா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் அரசு ராஜா, தாணுலிங்க நாடாரின் மகள் கற்பகம், மாநில இந்து முன்னணி நிா்வாகக்குழு உறுப்பினா் சத்திவேலன், நெல்லை கோட்ட தலைவா் தங்க மனோகரன், அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் செல்வன், பொதுச்செயலா் எம்ஆா் சிவா, பொருளாளா் பொன்னையா, துணைத் தலைவா்கள் பொன்பாண்டியன், சுரேஷ்குமாா், செயலா் சுபாஷ்விஜயன், முன்னாள் மாவட்ட பொருளாளா் திரவியம், மனோலயா மணிகண்டன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT