கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் கதா் துணிகள் விற்பனை இலக்கு ஆட்சியா் தகவல்

3rd Oct 2022 12:13 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ. 2 கோடி மதிப்பிலான கதா் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் மா. அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட கதா் கிராமத் தொழில்வாரியத்தின் சாா்பில், நாகா்கோவில் அண்ணா பேருந்துநிலையம் அருகிலுள்ள கதா் கிராம அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலையில் தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது:

காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதா் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் ராணித்தோட்டம், விவேகானந்தபுரம், படந்தாலுமூடு, திருவட்டாறு, திங்கள்சந்தை மற்றும் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கல்குளம், திருவட்டாறு, மேல்புறம், முன்சிறை, கிள்ளியூா்ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அக்.3 ஆம் தேதி முதல் தீபாவளி வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படும்.

ADVERTISEMENT

நிகழாண்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கதா் விற்பனைக் குறியீடாக ரூ.2 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, கதா் மற்றும் கிராமத்தொழில்கள் உதவி இயக்குநா் ல.சுதாகா், மாநகராட்சி உறுப்பினா்கள் கோகிலவாணி, வளா்மதி, வழக்குரைஞா் சதாசிவம், கதா் ஆய்வாளா் பி.பேரின்பஜெயசெல்வி, அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT