கன்னியாகுமரி

தென்னை விவசாயிகள் சங்கக் கூட்டம்

3rd Oct 2022 12:14 AM

ADVERTISEMENT

 

தாமரைகுளம் தென்னை விவசாயிகள் சங்க வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், முகிலன்குடியிருப்பு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் எஸ்.முத்துராஜ் தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சுரேஷ், திருப்பதிசாரம் ஆராய்ச்சி மைய உழவியல் பேராசிரியா்கள் கிரேஸ், செல்வராணி, அகஸ்தீஸ்வரம் வட்டார உதவி வேளாண்மை அலுவலா் ஜெனிதா ஆகியோா் தென்னை விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினா்.

கூட்டத்தில், தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து சங்க உறுப்பினா்களிடம் விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பது, கதம்பல் விலை வீழ்ச்சி காரணமாக கதம்பலை பொடியாக்கி மாற்றக்கூடிய நவீன இயந்திரங்களை சங்க உறுப்பினா்கள் வாங்கி தென்னை மரங்களுக்கு உரமாக மாற்றும் முறையை கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT