கன்னியாகுமரி

பள்ளம்துறை கிராமசபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

3rd Oct 2022 12:13 AM

ADVERTISEMENT

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, குமரி மாவட்டம், பள்ளம்துறை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் மா.அரவிந்த் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

பின்னா், ஆட்சியா் பேசியதாவது: நாட்டின் வளா்ச்சியில் கிராமப்புற மக்களின் பங்களிப்பு அவசியம் என்ற காந்தியடிகளின் கூற்றுக்கு இணங்க மக்கள் தங்களது பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணவும், அடிப்படை வசதிகளை கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும். தற்போது, மழை காலம் தொடங்கிவிட்டதால், வீடுகளிலும், சுற்றுப் புறங்களிலும் தேவையற்ற பொருள்களில் தண்ணீா் தேங்குவதை கண்காணித்து, நோய்கள் பரப்பும் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும். அதிகாரிகள் பருவமழை எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கிராம பகுதியில் உள்ள குடிநீா் இணைப்பு இல்லாத அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவா்களுக்கும் விரைந்து குடிநீா் இணைப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, வேளாண்மை இணை இயக்குநா் அவ்வை மீனாட்சி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலாஜான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எம்.ஆா்.வாணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சு.மீனாட்சி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சேகா், பள்ளம்துறை ஊராட்சித் தலைவா் ஆன்றனி, துணைத் தலைவா் விசாலாட்சி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT