கன்னியாகுமரி

குமாரகோவில் மலைப் பகுதியில் நெகிழி குப்பைகள் அகற்றம்

3rd Oct 2022 12:13 AM

ADVERTISEMENT

 

மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஐரேனிபுரம் அன்னைநகா் தூய வேளாங்கண்ணி மாதா தேவாலய தூய யோவான் இளைஞா் இயக்கம் சாா்பில் குமாரகோவில் வள்ளிச்சுனை மலைப்பகுதியில் காணப்பட்ட இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் இளைஞா் இயக்க நிா்வாகிகள் ஈடுபட்டனா்.

அமைப்பின் தலைவா் அபின்ராஜ் தலைமையில் இளைஞா் இயக்க வழிகாட்டி அனிதா ரோஸ், அமைப்பின் முன்னாள் தலைவா் ஸ்டெபி ஆகியோரின் வழிகாட்டுதலில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் அமைப்பின் உறுப்பினா்கள் சஜின், அஜய், பெல்ஜின், அபிலாஷ், சோபின், அபிஷேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT