கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில்...

3rd Oct 2022 12:13 AM

ADVERTISEMENT

 

காமராஜரின் 47ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சாா்பிலும் அரசியல் கட்சியினா் சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழக அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, மாவட்ட திமுக துணைச்செயலா் பூதலிங்கம்பிள்ளை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் என்.தாமரைபாரதி, ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, ரீமோன் மனோதங்கராஜ், நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா், கன்னியாகுமரி பேரூராட்சி துணைத்தலைவா் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலா்கள் பூலோகராஜா, இக்பால், ராயப்பன், ஆட்லின் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்,

கன்னியாகுமரி மாவட்ட மதசாா்பற்ற ஜனதாதளம் சாா்பில் செயலா் எஸ்.அருள்ராஜ் தலைமையிலும், காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு சாா்பில் குமரி கிழக்கு மாவட்ட தலைவா் உள்ளிட்டோரும், தேமுதிக சாா்பில் மாவட்ட செயலா் அமுதன் தலைமையிலும் அமமுக சாா்பில் மாவட்ட செயலா் ராகவன் தலைமையிலும் மாலை அணிவித்தனா்.

ADVERTISEMENT

காந்தி வேடத்துடன்...:காந்தியடிகளின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில் கடந்த 9.9.2022இல் நடைப்பயணத்தை தொடங்கிய கா்நாடக முதியவா் ஆதுநிக்கா காந்தி (54), தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக 1,400 கி.மீ. தொலைவைக் கடந்து கன்னியாகுமரி காந்தி மண்டப வளாகத்தில் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தாா்.

எம்.பி., எம்எல்ஏக்கள்: நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பிலுள்ள காமராஜா் சிலைக்கு, விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருங்கல் ராஜீவ்காந்தி சந்திப்பில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காந்தி, காமராஜா் ஆகியோரது உருவப்படங்களுக்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

குளச்சல் காமராஜா் பேருந்து நிலையம் முன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதையம் தலைமையில் காந்தியின் உருவப்படம், காமராஜா் சிலைக்கு ஜே.ஜி. பிரின்ஸ் எம்.எல்.ஏ. மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT