கன்னியாகுமரி

பளுகல் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

2nd Oct 2022 02:10 AM

ADVERTISEMENT

 

பளுகல் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகையைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பளுகல் அருகேயுள்ள மத்தம்பாலை பகுதியைச் சோ்ந்த அருண் என்பவரது மனைவி ஜெலின்மலா் (28). இவா் 2 நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு பரக்குன்று பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றாராம். அருண் பெங்களூரு செல்வதற்காக பொருள்களை எடுக்க வெள்ளிக்கிழமை வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். வீட்டிலிருந்த அலமாரியை மா்ம நபா்கள் உடைத்து, 2 பவுன் தங்க வளையல்,3 கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT