கன்னியாகுமரி

வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் உணவு திருவிழா

2nd Oct 2022 02:10 AM

ADVERTISEMENT

 

சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா கொண்டாடப்பட்டது.

உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழிக்கேற்ப, மழலையா் பிரிவு குழந்தைகள் தங்கள் பெற்றோா் உதவியுடன் தயாரித்துக் கொண்டுவந்த பராம்பரிய உணவு வகைகள் அனவரின் உள்ளங்களை கொள்ளை கொண்டன. பொது சுகதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வாழ்க்கை முறை நோய்களை எதிா்த்துப் போராடுவதற்கும், ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிா்த்துப் போராடுவதற்கும் உணவின் முக்கியத்துவத்தை மாணவா்களின் மனதில் பதியவைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

கம்பு இட்லி, நவதானிய சுண்டல், பாசிப்பயறு உருண்டை, சாமை பிரியாணி, வெண்பொங்கல், சத்துமாவு உருண்டை, கேழ்வரகு அல்வா, லட்டு, எள் உருண்டை, கடலை உருண்டை, கேழ்வரகு களி, இட்லி, அதிரசம், அச்சு முறுக்கு, மோதகம் போன்ற பலவகை உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

உணவு திருவிழாவை பள்ளி நிறுவனா் நாஞ்சில் வின்சென்ட் அறிவுரைப்படி செயலா் கிளாரிசா வின்சன்ட், முதல்வா் மேரி பிரீத்தா, மழலைகள் பிரிவு ஒருங்கிணைப்பாளா் அருள்ஷீலா மற்றும் ஆசிரியா்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT