கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே கடற்கரையில் தூய்மைப் பணி

2nd Oct 2022 02:10 AM

ADVERTISEMENT

 

கொல்லங்கோடு அருகே கடற்கரையைத் தூய்மை செய்யும் பணியில் புஷ்பகிரி லிட்டில் பிளவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஈடுபட்டனா்.

நெகிழி இல்லா நெய்தல் படை, கிரீன் சின்னத்துறை அமைப்புகள், கொல்லங்கோடு அருகேயுள்ள புஷ்பகிரி லிட்டில் பிளவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, லிட்டில் பிளவா் சென்ட்ரல் பள்ளி ஆகியவை இணைந்து இப்பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இப்பணிகளை சின்னத்துறை புனித யூதா ததேயு கத்தோலிக்க தேவாலய துணை பங்குத்தந்தை மரியஜெபின் தொடக்கிவைத்தாா். லிட்டில் பிளவா் மெட்ரிக் பள்ளி முதல்வா் அருள்சகோதரி ஜோபி ஜாா்ஜ் வாழ்த்திப் பேசினாா்.

ADVERTISEMENT

மாணவா்கள் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். மேலும் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்காக சேகரித்து வைத்தனா். மாணவா்களுக்கு அப்பகுதி மக்கள் மரக்கன்றுகள், மஞ்சப்பை உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினா். சமூக சேவகா் ஜென்சி தாஸ் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT