கன்னியாகுமரி

திருவிதாங்கோடு பகுதியில் சாலைப் பணி

2nd Oct 2022 02:09 AM

ADVERTISEMENT

 

திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதிகளில் சாலைப் பணியை தகவல்தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தொடக்கி வைத்தாா்.

திருவிதாங்கூா் தொறப்பு பிஸ்மி நகா் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில், திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவா் ஷா.ஹாருன் றஷீது, துணைத் தலைவா் அ.சுல்பத் அமீா், செயல் அலுவலா் வி.வினிதா, வாா்டு உறுப்பினா்கள் ஜெயா, முஹம்மது ராபி, செல்லத்துரை, தீப்தி, அய்யப்பன், பௌசியா, சுஜாதா, விக்னேஷ், மாவட்ட திட்ட உதவியாளா் ஹைமாவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT