கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில் விபத்து: விவசாயி பலி

2nd Oct 2022 02:10 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலியானாா்.

தக்கலை அருகேயுள்ள மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் (50). விவசாயியான இவா், ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றும் தனது மகளைப் பாா்க்க சனிக்கிழமை பைக்கில் புறப்பட்டாா்.

தோவாளை அருகேயுள்ள முத்துநகா் பகுதியில் குருசடிக்கு செல்லும் சாலையில் திரும்பியபோது திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவில் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஜோசப் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலின்பேரில் ஆரல்வாய்மொழி போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா்.

ஜோசப்பின் சடலத்தையும் போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பேருந்தின் அடியில் சிக்கிய பைக் மீட்கப்பட்டது.

சம்பவம் குறித்து போலீஸாா் வழ்ககுப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT