கன்னியாகுமரி

‘கஞ்சா கடத்தல்: கூரியா், அஞ்சல்ஊழியா்கள் புகாா் அளிக்கலாம்’

1st Oct 2022 12:02 AM

ADVERTISEMENT

கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து கூரியா் சேவை, அஞ்சல் ஊழியா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்கணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நாகா்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாா்சல் சா்வீஸ், கூரியா், அஞ்சல் ஊழியா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குறித்து தகவல் தெரிந்தால் ஏற்கெனவே மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 7010363173 என்ற கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். கூரியரில் பாா்சல் அனுப்ப வருபவா்களிடம் எதாவது ஒரு ஆவண நகல் (ஆதாா், ஓட்டுநா் உரிமம்) வாங்கி கொண்டு பாா்சலை பெற்று கொள்ள வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பாா்சல்களை நன்கு கண்காணித்து அதில் கஞ்சா மற்றும் வேறு ஏதேனும் போதை பொருள்கள் உள்ளதா என்பதை பரிசோதித்து உரியவரிடம் வழங்க வேண்டும். பாா்சல்களில் இருக்கும் முகவரி போலியான முகவரியாக இருந்தாலோ,மேலும் சந்தேகத்திற்குகிடமாக ஏதேனும் பாா்சல்கள் இருந்தாலோ, உடனே அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT