கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

நித்திரவிளை அருகே தனியாா் பள்ளி ஆசிரியையிடம் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிரமிளா (30). தனியாா் பள்ளி ஆசிரியையான இவா் புதன்கிழமை மாலையில் கிராத்தூா், பெருமாவிளை பகுதியில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கிராத்தூா் பகுதியில் இரு இளைஞா்கள் அவரை வழிமறித்து, பிரமிளா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பினராம்.

இது குறித்த புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT