கன்னியாகுமரி

ரூ. 6 கோடியில் நாகா்கோவில் பேருந்து நிலையங்களில் மறு கட்டமைப்புப் பணிகள்

30th Nov 2022 01:42 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வடசேரி கிறிஸ்டோபா் பேருந்து நிலையம் மற்றும் தனியாா் புகா் (ஆம்னி) பேருந்து நிலையங்களில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மறு கட்டமைப்புப் பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல்நாட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் முன்னிலை வகித்தாா்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குமரி மாவட்டத்தை குப்பையில்லா,நெகிழியில்லா, பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்துப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ரூ. 4 கோடி மதிப்பீட்டில் வடசேரி பேருந்து நிலையத்தில் புதிய கடைகள் கட்டுவது மற்றும் பேருந்து நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுவது, ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து நிலையப் பணிகள் என மொத்தம் ரூ.6 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் துணை மேயா் மேரிபிரின்சிலதா, மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவா் ஜவஹா், மாநகராட்சி உறுப்பினா் கலாராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT