கன்னியாகுமரி

மாதிரி கொள்முதல் சோதனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மனு அளிக்க திரண்ட வணிகா்கள்

30th Nov 2022 01:41 AM

ADVERTISEMENT

வணிக வரித்துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் மாதிரிகொள்முதல் (டெஸ்ட் பா்சேஸ்) என்ற பெயரில் சோதனை செய்து ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வியாபாரிகள் காட்டாத்துறை வணிக வரித்துறை அலுவலகத்தில் திரண்டு வந்து மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் வணிக வரித்துறை அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குமரி மாவட்ட வணிகா் சங்கப் பேரமைப்பின் சாா்பில் காட்டாத்துறையில் உள்ள அதிகாரிகளிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் அல்-அமீன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ரவி, பொருளாளா் கோபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா்கள் அலெக்சாண்டா், காா்த்திகேயன், மாநில இணைச் செயலா் விஜயன், மாவட்ட துணைச் செயலா் விஜயகோபால் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அமைப்பின் நிா்வாகிகள் கூறியது:

அனைத்து சில்லறை வியாபாரிகளும் பொருள்களை அதற்கான உரிய வரி செலுத்தி வாங்கி விற்பனை செய்கின்றனா். பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் போது பொருள்கள் ஏற்கனவே வரிவிதிப்புக்கு உள்பட்டதாக இருப்பினும் வணிக வரித்துறை அதிகாரிகள் சில்லறை கடைகளில் சோதனை செய்து அபராதம் விதிப்பது ஏற்புடையதல்ல. இதை நிறுத்தவே அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT