கன்னியாகுமரி

கிள்ளியூா் வட்ட பகுதிகளில் தடையின்றி ரேஷன் பொருள்கள் வழங்கக் கோரிக்கை

30th Nov 2022 01:43 AM

ADVERTISEMENT

கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தடையின்றி பொருள்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் வட்டத்தில் மாங்கரை, மத்தி கோடு, எட்டணி, முள்ளங்கனாவிளை, மேல் மிடாலம், மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களான அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக வழங்காமல் தாமதப்படுத்துகின்றனா்.

குறிப்பாக கடைசியில் செல்லும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைப்பதில்லை. எனவே, அனைத்து குடும்பஅட்டை தாரா்களுக்கும் தடையின்றி முறையாக ரேஷன் பொருள்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT