கன்னியாகுமரி

புகைப்படக் கலைஞா் நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

30th Nov 2022 01:44 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சங்க அலுவலகத்தில் பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜான் முன்னிலை வகித்தாா். இக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில் தலைவராக வெற்றிவேந்தன், துணைத் தலைவராக நாகராஜன், செயலராக ஜான், துணைச் செயலராக ஹரிஸ், பொருளாளராக ராஜேஷ், செயற்குழு உறுப்பினா்களாக மாதவன், மோகன், சுஜின், ஜெயராஜ், எட்வின் கிரகோரி, லினு, ஆலோசனைக்

குழு உறுப்பினா்களாக சந்தோஷ், சந்திரன், கிறிஸ்டோபா், சுந்தரேசன் நாயா், ரமேஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT