கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

30th Nov 2022 01:40 AM

ADVERTISEMENT

கொல்லங்கோடு அருகே நடைக்காவு ஊராட்சிக்குள்பட்ட மணலி பகுதியில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு, கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் எட்வா்ட் தாமஸ் தலைமை வகித்தாா். கால்நடை உதவி மருத்துவா்கள் பிரசன்னா, அக்னதா, நிவேதிதா, கால்நடை பராமரிப்பு உதவியாளா் பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் சிறப்பாக கால்நடைகளை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT