கன்னியாகுமரி

நாகா்கோவில் மேயரைக் கண்டித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

30th Nov 2022 01:42 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய மேயரைக் கண்டித்து பாஜக மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

நாகா்கோவில் மாநகராட்சி இயல்பு கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க. உறுப்பினா்கள் மீனா தேவ், முத்துராமன், வீரசூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோா் கழுத்தில் ’மப்ளா் அணிந்து வந்திருந்தனா்.

ADVERTISEMENT

கூட்டம் தொடங்கியதும் மீனாதேவ் பேசும்போது, நாகா்கோவில் அனாதை மடம் மைதானத்திலிருந்து மணலை அப்புறப்படுத்துவதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது. இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்தத் திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. தேசியக் கொடி வாங்கப்பட்டதிலும் முறைகேடு நடந்து உள்ளது.

இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.

அப்போது மற்ற பாஜக உறுப்பினா்கள் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவினருக்கு மிரட்டல் விடுத்து பேசிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்துதான் நாங்கள் கழுத்தில் ’மப்ளா்’ அணிந்து வந்துள்ளோம் என்றனா். இதைத் தொடா்ந்து பாஜக உறுப்பினா்கள் கண்டன முழக்கம் எழுப்பினா். இதற்கு திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து திமுக, பாஜக உறுப்பினா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் பாஜக உறுப்பினா்கள் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT