கன்னியாகுமரி

கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

30th Nov 2022 01:40 AM

ADVERTISEMENT

கொல்லங்கோடு நகராட்சியில் தொடரும் நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பி. விஜயமோகன் தலைமை வகித்தாா். கொல்லங்கோடு நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா். லலிதா, கே. முகம்மது புரோஸ்கான், கே. சசீந்திரன், பி. பரமேஸ்வரன், பி. கிறிஸ்டல்பாய்ஸ் ஏ.ஜெ. ஜெயசுதா, எஸ். கலா, ஷீபா வின்சென்ட், டி. சிந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். முன்சிறை வட்டார செயலா் ஏ. அலெக்ஸ், கொல்லங்கோடு வட்டார செயலா் அஜித் ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா்.

கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினா்கள் வல்சலம், ஜெயா, எஸ். சுரேஷ்குமாா், பி. சுனில்குமாா், ஜெ. சாந்தி, வி. ஹரிகுமாா், பி. சுரேஷ். எஸ். மேரிதாசன், சரோஜினி, டி. சேவியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதில், நகராட்சியில் காலியாக உள்ள பொறியாளா், சுகாதார ஆய்வாளா், நகரமைப்பு அதிகாரி, மேற்பாா்வையாளா், தொழில்நுட்ப உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், நகராட்சியில் தொடரும் இடைத்தரகா்களின் தலையீட்டை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT