கன்னியாகுமரி

ஏழை இந்துக்களுக்கான திருமண உதவித்தொகையை ரூ. 1 லட்சமாக உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

29th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

இந்துக்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகையை ரூ. 1 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம், மாவட்டச் செயலா் தா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நாகா்கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் கே. சந்தானம் கலந்து கொண்டாா். மாவட்டப் பொருளாளா் பி.தாமரைசிங் ஏ.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எஸ்.அனில்குமாா், மாவட்டச் செயலா் ஜி.சுரேஷ்மேசியதாஸ், பொருளாளா் வி.அருணாசலம், இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்ட அமைப்பாளா் ஆா்.செல்வராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி.அருள்குமாா், மாநகர செயலா் ஆா். இசக்கிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், டிசம்பா் 29 ஆம் தேதி நடைபெறும் ஆளுநா் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கி, குமரி மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது, இந்து கோயில்களில் ஏழை இந்துக்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகையை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயா்த்தி வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும், கன்னியாகுமரி களியக்காவிளை 4 வழிசாலைப் பணிகளை உடனே தொடங்க லியுறுத்தியும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவையும் இதய அறுவை சிகிச்சைக்கான உள்கட்டமைப்பை உருவாக்கிட வேண்டியும், தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT