கன்னியாகுமரி

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் 22 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

29th Nov 2022 12:33 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி 22 ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு கடந்த 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இப்போராட்டம் 22 ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சிற்றாறு, கோதையாறு, மணலோடை, கீரிப்பாறை ஆகிய கோட்ட மேலாளா்கள் அலுவலகங்கள் முன்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT