கன்னியாகுமரி

குமரி பேரூராட்சியில் சீசன் கடைகள் ரூ. 55.37 லட்சத்துக்கு ஏலம்

29th Nov 2022 12:33 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி பேரூராட்சியில் திங்கள்கிழமை, தற்காலிக சீசன் கடைகள் ரூ. 55 லட்சத்து 37 ஆயிரத்து 322-க்கு ஏலம் போயின.

கன்னியாகுமரியில் நவம்பா் தொடங்கி ஜனவரி வரை சீசன் காலமாகும். இந்த 3 மாதங்களிலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள், வட இந்திய சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வந்து செல்வது வழக்கம்.

சீசனையொட்டி, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கன்னியாகுமரி நடைபாதை சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும். அதன்படி, நிகழாண்டு ஏலம் கன்னியாகுமரி சிறப்புநிலைப் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், காா் பாா்க்கிங் ரூ. 20 லட்சத்து 22 ஆயிரத்து 222-க்கும், சிலுவைநகா் தற்காலிக கழிப்பறை ரூ. 1.60 லட்சத்துக்கும், 44 தற்காலிக நடைபாதைக் கடைகள் ரூ. 33 லட்சத்து 55 ஆயிரத்து 100-க்கும் ஏலம் போயின. இதன்மூலம் பேரூராட்சிக்கு ரூ. 55 லட்சத்து 37 ஆயிரத்து 322 வருவாய் கிடைத்தது.

ADVERTISEMENT

நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் சேதுராமலிங்கம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயலெட்சுமி, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன் ஆகியோா் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

இதையொட்டி, கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT