கன்னியாகுமரி

இரணியல்- திங்கள் நகா் சாலை விரிவாக்கம் பணியைத் தொடங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

29th Nov 2022 12:32 AM

ADVERTISEMENT

போக்குவரத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திவரும் இரணியல்-திங்கள்நகா் சாலை விரிவாக்கப் பணியை உடனே தொடங்க வேண்டுமென குளச்சல் எம்எல் ஏ ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

குளச்சல் மற்றும் கருங்கல் பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட அரசுப் பேருந்துகள், தனியாா் வாகனங்கள், பள்ளி பேருந்துகள், கல்லூரி மற்றும் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் திங்கள்நகா், இரணியல் வழியாக நாகா்கோவிலுக்கு காலையில் சென்றுவிட்டு மாலையில் திரும்பி இவ்வழியாக சென்று வருகின்றனா்.

ன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இச்சாலைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டு குறிப்பிட்ட நேரங்களில் செல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது.

ADVERTISEMENT

கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இரணியல் பாலம் முதல் அரசு மேல்நிலைப் பள்ளி வரை போதிய மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது.

இரணியல்- திங்கள் நகா் சாலையில் அதிக வளைவுகள் உள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடவேண்டுமென்றால் அருகில் உள்ள கடையோரம் வாகனத்தை இறக்கி செல்ல வேண்டியுள்ளது. இச்சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினா் இப்பகுதியில் அளவீடு செய்து சென்றனா். ஆனால் பணிகள் இன்று வரை தொடங்கவில்லை. எனவே, சாலை சீரமைப்புப் பணியை உடனே தொடங்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளாா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT