கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே கடத்தப்பட இருந்த 875 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

29th Nov 2022 12:33 AM

ADVERTISEMENT

நித்திரவிளை அருகே 2 ஆட்டோக்களில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 875 லிட்டா் மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இனயம் கடற்கரைப் பகுதியிலிருந்து கேரளத்துக்கு 2 ஆட்டோக்களில் மானிய விலை மண்ணெண்ணெய் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நித்திரவிளை காவல் நிலைய தலைமைக் காவலா் ஜெயக்குமாா், தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஜோஸ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு விரிவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த கேரளப் பதிவெண் கொண்ட 2 பயணிகள் ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினா். ஆட்டோக்கள் நிற்காமல் சென்ால் போலீஸாா் வாகனத்தில் துரத்திச் சென்று வைக்கல்லூரி பகுதியில் மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனராம்.

ஆட்டோக்களில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் 875 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. மண்ணெண்ணெய், 2 ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்து கிள்ளியூா் வட்ட வழங்கல் அதிகாரியிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT