கன்னியாகுமரி

கருங்கல்லில் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்

29th Nov 2022 12:32 AM

ADVERTISEMENT

கருங்கல் வியாபாரிகள் நலச் சங்க செற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் அஜித்குமாா் தலைமை வகித்தாா். செயலா் துரைராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கருங்கல் ராஜீவ் காந்தி சந்திப்பு முதல் கூனாலுமூடு வரை பேரூராட்சி சாா்பில் நடைபெறும் மழைநீா் ஓடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மூசாரி - பாலூா் இணைப்பு சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பொருளாளா் ஆனந்த மா்ட்டின், துணைத் தலைவா் ராஜா செயற்குழு உறுப்பினா்கள் கிங்ஸ்லி , ஜஸ்டின், வேதபால்மா், பிரேம்சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT