கன்னியாகுமரி

உண்ணாமலைக்கடை, விளவங்கோடு பகுதியில் நாளை மின்தடை

29th Nov 2022 12:32 AM

ADVERTISEMENT

உண்ணாமலைக்கடை, விளவங்கோடு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவ.30) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழித்துறை துணைக் கோட்டம் மாா்த்தாண்டம் பிரிவுக்குள்பட்ட குருவிக்காடு, ஆயிரம்தெங்கு, கொல்லக்குளம், உண்ணாமலைக்கடை, பயணம், பெரும்புளி பகுதிகளிலும், குழித்துறை பிரிவுக்குள்பட்ட விளவங்கோடு, பாலவிளை, ஈத்தவிளை, தேவிநகா், வயலுண்ணிக்கரை ஆகிய பகுதிகளிலும் அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (நவ. 30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT