கன்னியாகுமரி

தக்கலை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு

28th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

 

தக்கலையில் பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சாா்பில், திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நற்பணி மன்ற மாவட்டப் பொருளாளா் ஜூடு சேம் தலைமை வகித்தாா். கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னா், தூய்மைப் பணியாளா்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன. தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அவா் அணிவித்தாா். அங்குள்ள நோயாளிகளுக்கு பழங்கள், உணவுப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொறியாளா் அணி அமைப்பாளா் வா்க்கீஸ், பத்மநாபபுரம் நகா்மன்ற உறுப்பினா்கள் சுலேகாபேகம், மும்தாஜ், சுகந்தி, ஜெமிலா, முன்னாள் நகா்மன்றத் தலைவா் ரேவன்கில், நிா்வாகிகள் எட்ரின் அஜீஸ், எட்வின்ராபி, ஸ்ரீராம், பதரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கொட்டாரம் சந்திப்பில்... அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் கொட்டாரம் சந்திப்பில் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூா் செயலா் எஸ்.வைகுண்ட பெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT