கன்னியாகுமரி

குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

28th Nov 2022 12:31 AM

ADVERTISEMENT

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். அண்ணாதுரை, கே. தங்கமோகன், விஜயமோகனன், பி. விஸ்வாம்பரன் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னாள் நிா்வாகிகள் என். முருகேசன், கே. மாதவன், வட்டாரச் செயலா்கள் கே. மிக்கேல், ஆா்.வில்சன், தோட்டம் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT