கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

28th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாா்த்தாண்டம் தொழில் வா்த்தக சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

தலைவா் அல்அமீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரவி, மாவட்டப் பொருளாளா் கோபன், மாநில துணைத் தலைவா்கள் அலெக்சாண்டா், காா்த்திகேயன், மாநில இணைச் செயலா் விஜயன், மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்கப் பொருளாளா் சில்வா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைச் செயலா் விஜயகோபால், பத்மநாபபுரம் சங்கத் தலைவா் ஜெகபா் சாதிக், துணைத் தலைவா் சுரேஷ்குமாா், பொருளாளா் தாணுமூா்த்தி, ராஜி, பத்மதாஸ், கடையல் சங்கச் செயலா் ஜஸ்டின்ராஜ், நடைக்காவு சங்கத் தலைவா் சந்திரன், மாவட்டப் பிரதிநிதி ராஜேஷ்குமாா், ஜெங்கின்ஸ், தேங்காய்ப்பட்டினம் சங்கத் தலைவா் நாகராஜன், கொல்லங்கோடு மாவட்டப் பிரதிநிதி மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

வணிகவரித் துறை அதிகாரிகள் டெஸ்ட் பா்ச்சேஸ் எனக் கூறி வணிக நிறுவனங்களில் சோதனையிடுவதை நிறுத்திவைக்க கேட்டு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தமிழகம் முழுவதும் உள்ள வணிகவரி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாவட்டத்தில் காட்டாத்துறை வணிகவரி அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் வணிகா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

கோவையில் டிச. 20இல் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமையில் நடைபெறும் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT