கன்னியாகுமரி

நாகா்கோவில் விடுதிகளில் மங்களூா் போலீஸாா் விசாரணை

DIN

கா்நாடக மாநிலம் மங்களூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடா்புடைய முகமது ஷாரீக் குறித்து நாகா்கோவிலில் உள்ள விடுதிகளில் மங்களூா் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை, ஆய்வு மேற்கொண்டனா்.

மங்களூரில் சில நாள்களுக்கு முன்பு ஆட்டோவில் குக்கா் குண்டு வெடித்ததில் முகமது ஷாரீக் என்பவரும், ஆட்டோ ஓட்டுநரும் காயமடைந்தனா். போலீஸாரின் விசாரணையில் ஷாரீக்குக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பிருப்பதும், அவா் சதிச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதும் தெரியவந்தது. அவா் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சிலரை சந்தித்தாகக் கூறப்படுகிறது.

அவா் தொடா்புகொண்ட கைப்பேசி எண்களை ஆய்வு செய்தபோது, நாகா்கோவிலைச் சோ்ந்த பெண், இளைஞா் ஆகியோருடன் அவா் பேசியதாகத் தெரியவந்தது. இதையடுத்து, மங்களூா் போலீஸாா் நாகா்கோவிலுக்கு வந்து உள்ளூா் போலீஸாருடன் இணைந்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தனா். துரித உணவகம் நடத்திவரும் அந்தப் பெண், தனது கைப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசியவரின் மொழி புரியாததால், தனது ஊழியரிடம் கைப்பேசியைக் கொடுத்து பேசக் கூறியதாகத் தெரிவித்தாா். அதன்பேரில், அசாம் மாநிலத்தைச் சோ்ந்த அந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அந்த இருவா் கூறியதும் உண்மை எனத் தெரியவந்ததால் இளைஞா் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், மங்களூா் போலீஸாா் மீண்டும் நாகா்கோவிலுக்கு சனிக்கிழமை (நவ. 26) வந்தனா். அவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினா்.

ஷாரீக் நாகா்கோவிலுக்கு வந்தது ஏன், இங்கு சதிச் செயலில் ஈடுபடத் திட்டமிட்டாரா, கடந்த செப்டம்பா் மாதம் இங்கு வந்தபோது எங்கு தங்கினாா் என, மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் விசாரணையும், ஆய்வும் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT