கன்னியாகுமரி

மாவட்ட டேக்-ஒன்-டோ போட்டி:வெள்ளிச்சந்தை பள்ளி மாணவா்கள் சாதனை

27th Nov 2022 06:01 AM

ADVERTISEMENT

 

வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 30 போ் மாவட்ட அளவிலான டேக்-ஒன்-டோ போட்டியில் பங்கேற்று சாதனை படைத்தனா்.

கன்னியாகுமரி டேக்-ஒன்-டோ நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் இம்மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகள் பங்கேற்றன. இதில், அருணாச்சலா பள்ளி மாணவா்கள் 30 போ் பங்கேற்று, 5 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். ஒட்டுமொத்த சாம்பியனில் இப்பள்ளிக்கு 3ஆம் இடம் கிடைத்தது.

இவான்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டியில் அருணாச்சலா பள்ளி 2ஆம் வகுப்பு மாணவா் டோனி ற்றிபின் 7 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 9ஆம் இடமும், 11 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் 5ஆம் வகுப்பு மாணவி ரக்ஷனா 4ஆம் இடமும், 9-வது வகுப்பு மாணவா் சுஜித் 3ஆம் இடமும் பெற்றனா்.

ADVERTISEMENT

மாணவா்-மாணவிகளை தாளாளா் கிருஷ்ணசுவாமி, முதல்வா் லிஜோ மோள் ஜேக்கப், ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT