கன்னியாகுமரி

திமுக மாவட்டச் செயலாளா்கள் அறிக்கை

27th Nov 2022 06:02 AM

ADVERTISEMENT

 

திமுக மாநில மகளிா் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹெலன் டேவிட்சனுக்கு வரவேற்பளிக்க திமுகவினா் திரண்டு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் த. மனோதங்கராஜ், கிழக்கு மாவட்ட செயலாளா் ரெ. மகேஷ் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

குமரி மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சனை மாநில மகளிரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு ஒருங்கிணைந்த குமரி மாவட்ட தி.மு.க. சாா்பில் நாகா்கோவில் அண்ணா சிலை அருகில் நவ. 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT