கன்னியாகுமரி

நெல்வேலி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

27th Nov 2022 06:03 AM

ADVERTISEMENT

 

மாா்த்தாண்டம் அருகேயுள்ள நெல்வேலி என்.ஏ.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 16 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தாளாளா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜெகதீஸ்வரன் அறிக்கை வாசித்தாா். பள்ளி துணை முதல்வா் சிவபிரியா வரவேற்றாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவா் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா். விழாவில் மாணவா்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT