கன்னியாகுமரி

ரூ. 49.25 கோடியில் நவீனமயமாக்கும் திட்டம்: குமரி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரி ஆய்வு

26th Nov 2022 02:10 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ. 49.25 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அங்கு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சா்வதேச சுற்றுலாத்தலமாக திகழும் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரயில் நிலையத்தின் முகப்பு விவேகானந்தா் நினைவு மண்டபத்தைப் போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு ரூ. 49.25 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது. அதில், கூடுதல் டிக்கெட் கவுண்டா்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் 26ஆம் தேதி கன்னியாகுமரி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் இருந்து பிரதமா் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி மேம்பாட்டு பணியைத் தொடங்கிவைத்தாா்.

இந்நிலையில், கன்னியாகுமரி ரயில் நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து காட்சிபடுத்தப்பட்டிருந்த விளக்க படங்களைப் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து, ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்ததுடன், ரயில்வே துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா். பின்னா், நாகா்கோவில் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT