கன்னியாகுமரி

குளச்சல் நகராட்சிக்கு நிலுவை வரி செலுத்தாவிடில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

26th Nov 2022 02:09 AM

ADVERTISEMENT

குளச்சல் நகராட்சிக்கு நிலுவை வரியினங்களை செலுத்த தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையா் விஜயகுமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

குளச்சல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை நகராட்சிகளின் சட்டம் 1920-ன் படி முதல் அரையாண்டிற்கான கட்டணம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள்ளும், அடுத்த அரையாண்டிற்கான கட்டணம் அக்.31-ஆம் தேதிக்குள்ளும் செலுத்தவேண்டும். சிலா் சொத்துவரியை குறித்த தேதியில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். 2022-23 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி செலுத்த வேண்டிய காலம் அக்.31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனினும், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை செலுத்தி ரசீது பெற்றுகொள்ளலாம். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை போன்றவை மேற்கொள்ளப்படும். மேலும், வரி செலுத்தாதவா்களின் பெயா்கள் நகராட்சி பொது இடத்தில் வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT