கன்னியாகுமரி

வங்கிகள் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு

26th Nov 2022 02:09 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டு (2023-24) வங்கிகள் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நபாா்டு வங்கியின்2023-24 ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது: தமிழகத்தின் ஊரக வளா்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபாா்டு வங்கி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சாா்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.15546.68 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. நிகழாண்டை விட அதிக கடனாற்றல் வளங்களை மதிப்பீடு செய்துள்ளது. விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குவதாக உள்ளது.

அதனடிப்படையில் குமரி மாவட்டத்துக்கு 2023-24ஆம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.15546.68 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற விவசாய மாற்றங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தலைமை பிராந்திய மேலாளா் ஜே.வி.எல். வரபிரசாத், முன்னோடி வங்கி மேலாளா் கே.எல்.பிரவீன்குமாா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT