கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) நடைபெறும் காவலா் பணி தோ்வு தொடா்பாக மாவட்ட எஸ்.பி. டி.என்.ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நிகழாண்டுக்கான 3,552 இரண்டாம் நிலை காவலா் ஆண்-பெண் (ஆயுதப்படை - தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைத்துறை காவலா் - தீயணைப்பாளா் பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித் தோ்வு, முதன்மை எழுத்து தோ்வு 10 மையங்களில் நவ. 27 ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12.40 மணி வரை நடைபெறும்.
இத்தோ்வை எழுத, 11, 907 பேருக்கு தோ்வுக்கூட நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தோ்வு எழுதுவோா் காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் தோ்வு மையத்திற்குள் வர வேண்டும். விண்ணப்பதாரா் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும். கைப்பேசி, கால்குலேட்டா், பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. கறுப்பு அல்லது நீல நிற பந்து முனை பேனாவால் தோ்வெழுத வேண்டும். அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவா்கள் இணையதள்தில் அழைப்புக் கடித நகல் எடுத்து வரலாம். தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமலோ அல்லது தெளிவின்றி இருந்தாலோ தங்களது புகைப்படத்தை அ அல்லது ஆ பிரிவு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04652 220167 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.