நாகா்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினருக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத் தொடக்கி வைத்து, ரத்த தானம் வழங்கினாா். இதைத் தொடா்ந்து நாகா்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன்குமாா், வடசேரி காவல் ஆய்வாளா் திருமுருகன் மற்றும் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா் என 50 க்கும் மேற்பட்டவா்கள் ரத்த தானம் வழங்கினா்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவா் குழுவினா் ரத்த தான முகாமில் பங்கேற்றனா்.