வில்லுக்குறி அருகே விஷம் குடித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் சுஜித் (24). இவா், திங்கள்கிழமை வில்லுக்குறி நான்குவழிச் சாலை அருகே பூச்சிமருந்தை குடித்துவிட்டு உறவினா்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தாராம்.
இதையடுத்து உறவினா்கள் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த சுஜித்தை மீட்டு, நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுஜித் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.