கன்னியாகுமரி

தூய்மைப் பணிக்கு புதியபொக்லைன் இயந்திரங்கள்

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கான பொக்லைன் இயந்திரங்களின் செயல்பாட்டை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

நாகா்கோவில் மாநக ராட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்துவது, கழிவு நீா் ஓடையை தூய்மைப்படுத்துவது ஆகிய பணிகளுக்காக, ரூ.1 கோடி மதிப்பில் பொக்லைன் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் செயல்பாட்டை மாநகராட்சி அலுவலகத்தில், மேயா் ரெ.மகேஷ் தொடக்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் ஆனந்த் மோகன், செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், நகா்நல அலுவலா் ராம்குமாா், துணை மேயா் மேரிபிரின்சி லதா, மாமன்ற உறுப்பினா்கள் முத்துராமன், ஜவகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT