கன்னியாகுமரி

முன்னாள் படைவீரா்கள் குடும்பத்தினருக்கு தொழிற்பயிற்சி

19th Nov 2022 02:03 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினருக்கு இலவசமாக தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முன்னாள் படை வீரா்கள், விதவையா்கள் மற்றும் சாா்ந்தோா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம்.

இதில் சேர விருப்பமுள்ளவா்கள் இம்மாதம் 24 ஆம் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படை வீரா் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT