கன்னியாகுமரி

‘மாநகரில் கட்டட அனுமதிக்கு விதிமுறை பின்பற்றுதல் அவசியம்’

19th Nov 2022 02:02 AM

ADVERTISEMENT

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விதிமுறைகளுக்குள்பட்டு கட்டடங்கள் கட்டினால் மட்டுமே அனுமதி வழங்குவது என அலுவலா்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நகா் ஊரமைப்பு துறை இயக்குநா் எ.சரவணவேல் ராஜ் கடந்த 2 நாள்களாக ஆய்வு மேற்கொண்டாா். வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணிக்குப் பின், மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இக்கூட்டத்தில், ஆட்சியா் மா.அரவிந்த், மேயா் ரெ.மகேஷ், ஆணையா் ஆனந்த்மோகன், அதிகாரிகள் கலந்துகொண்டனா். நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ஏற்கெனவே கட்ட ப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து, புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக வளாகங்கள் அரசின் விதிமுறை களுக்குள்பட்டு கட்டினால் மட்டுமே அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட் டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT