கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

19th Nov 2022 02:03 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே உள்ள வில்லாரி விளை பகுதியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அம்சி பகுதியை சோ்ந்தவா் முருகன் (42). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். வில்லாரி விளை பகுதியில் வசித்து வந்தாா். குடிப்பழக்கமுடைய இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT