கன்னியாகுமரி

நித்திரவிளை காவல் நிலையம் முற்றுகை: 8 பங்குத்தந்தைகள் உள்பட 520 போ் மீது வழக்கு

19th Nov 2022 02:02 AM

ADVERTISEMENT

நித்திரவிளை காவல் நிலையத்தை முற்றுகையிட்டது தொடா்பாக 8 பங்குத்தந்தைகள் உள்பட 520 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நித்திரவிளை அருகே கே.ஆா்.புரம் பகுதியில் உள்ள நிலம் தொடா்பாக தூத்தூா் புனித யூதா கல்லூரி நிா்வாகத்துக்கும், தனிநபா் ஒருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாம்.

இந்நிலையில், அந்த நிலத்தை சுற்றி சம்பந்தப்பட்ட நபா் போலீஸ் பாதுகாப்புடன் முள்வேலி அமைத்தாராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்தூா் உள்பட 8 மீனவ கிராம பங்குத்தந்தைகள், பொதுமக்கள் சோ்ந்து முள்வேலியை சேதப்படுத்தினராம். இதுதொடா்பாக 8 பங்குத்தந்தைகள் உள்பட 67 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜன் என்பவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்றனராம்.

இதைக் கண்டித்து பங்குத்தந்தைகள் உள்பட ஏராளமானோா் காவல் நிலையத்தை நண்பகல் 12 மணிக்கு முற்றுகையிட்டனா். அவா்களிடம் மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இரவு 9.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நித்திரவிளை காவலா் ஜாண் பென்சிங் அளித்த புகாரின் பேரில் பங்குத்தந்தைகள் ஷாபின் (தூத்தூா்), ஜிபு (சின்னத்துறை), சுரேஷ்பயஸ் (மாா்த்தாண்டன்துறை), கிளீட்டஸ் (நீரோடி), ரெஜீஸ்பாபு (இரவிபுத்தன்துறை), அஜிஸ் ஜாண் சுமேஸ் (இரயுமன்துறை), பென்சிகா் (பூத்துறை), ரிச்சா்டு சவேரியாா் (வள்ளவிளை), முன்சிறை ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேபிஜான், ஆகிமோன், டைட்டஸ், கொல்லங்கோடு நகா்மன்ற உறுப்பினா்கள் ஷீபா, டெல்மா உள்பட 520 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT