கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சி: 10 ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

19th Nov 2022 01:59 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் மாநகராட்சி 10 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

எம்.எஸ். சாலை , அசம்பு சாலை,பெரிய ராசிங்கன் தெரு, ரவிவா்மன் புதுத் தெரு, செட்டித் தெரு, புளியடி தெரு, ஆறாட்டு சாலை, சி.பி.எச். சாலை பகுதிகளில் மேயா் ஆய்வு செய்தாா்.

அப்போது அந்த பகுதிகளில் உள்ள கழிவுநீா் ஒடைகளை சுத்தம் செய்யவும், பழுதான சாலைகளைச் சீரமைக்கவும் , மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது துணை மேயா் மேரி பிரின்சி லதா, மாமன்ற உறுப்பினா் வளா்மதி, மண்டலத் தலைவா் ஜவகா், அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT